முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு: பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய(priyantha-weerasuriya) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கை தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பு விடயங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரியந்த வீரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு
மேலும், பொது பாதுகாப்பு அமைச்சினால் இந்த மதிப்பீட்டு அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டாம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக சில தரப்புக்களில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு
எனினும் குறித்த செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பிலான அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 21 நிமிடங்கள் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
