இலங்கையில் 20 முதல் 30 சதவீதம் அதிகரிக்கும் மின் கட்டணம்..! கொழும்பில் பகிரங்க தகவல்
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் மின் கட்டணங்களை 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வைத்து அவர் இந்த விடயத்தை அவர் கூறியுள்ளார்.
நிலக்கரி டெண்டர்
மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் அழைக்கப்படும் நிலக்கரி டெண்டரை நான்கு மாதங்கள் தாமதப்படுத்தியுள்ளது. தகுதிகளைத் தளர்த்தி நட்பு நிறுவனங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.
42 நாள் டெண்டர் காலம் 21 நாட்களாகக் குறைக்கப்பட்டு செயற்கையான அவசரம் உருவாக்கப்பட்டாலும், டெண்டரை இரண்டு மாதங்கள் வழங்குவதில் எந்த அவசரமும் இல்லை என்பது தெளிவாகிறது. இது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும்.

மின்சார தயாரிப்பு
தேவையான 38 நிலக்கரி கப்பல்களுக்குப் பதிலாக, இந்த முறை குறைந்த எண்ணிக்கையிலான கப்பல்களை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும். நிலக்கரி பற்றாக்குறை காரணமாக, ஜூலை முதல் செப்டெம்பர் வரை டீசலைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க வேண்டியிருக்கும்.
மேலும் ஒவ்வொரு கப்பலுக்கும் சுமார் 500 மில்லியன் ரூபாய் செலவிட வேண்டியிருக்கும். குறைந்த விலையில் நிலக்கரி வழங்கப்படும் என்று கூறப்பட்டாலும், தரமற்ற நிலக்கரியைப் பெற்றதால் அரசுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 8 மணி நேரம் முன்
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri