இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வி்டுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு இலங்கைத் தூதரகம் முக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான அபாயம் காணப்படுவதால், இலங்கைத் தொழிலாளர்கள் இது குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் முக்கிய அறிவிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இஸ்ரேல் -ஈரான் மற்றும் அமெரிக்கப் படைகள் தொடர்புப்பட்டுள்ள மத்திய கிழக்குப் போர்ச் சூழல் 11 நாட்களாக நீடித்து வரும் நிலையில், அது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதைக் காணமுடிகிறது.
நேற்று(10) இரவு மாத்திரம் 7 முறை எச்சரிக்கைச் சங்கொலிகள் ஒலித்தன.

இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படும்போது, இராணுவ மற்றும் தொடர்பாடல் இலக்குகளைக் குறிவைத்து ஏவுகணைகளை ஏவும் போக்குக் காணப்படுகிறது.
இது தவிர, சமூக வலைதளங்கள் அல்லது மின்னஞ்சல்கள் ஊடாக அறிமுகமில்லாத எண்கள் அல்லது கணக்குகளிலிருந்து கிடைக்கப்பெறும் எந்தவொரு செய்தியையும் அல்லது கோப்பையும் எக்காரணம் கொண்டும் திறக்க வேண்டாம் என இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இன்று(11) அறிவித்துள்ளன.
ஏனெனில், பல சந்தர்ப்பங்களில் சைபர் தாக்குதல்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன" என குறிப்பிட்டுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் தீவிரமடையும் பதற்றம்! சுட்டுவீழ்த்தப்படும் ஈரானிய குண்டுவீச்சு விமானங்கள்
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு நடிகை VJ பார்வதி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam