ஈரானில் கருப்பு மழை! வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அவசர எச்சரிக்கை
ஈரானில் கருப்பு மழை பெய்துள்ளமையினால் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படியும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஈரானில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் கரும்புகை வான் வரை பரவி வருகின்றது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இந்நிலையில், கரும்புகையும், அமில மழையும் சேர்ந்து பெய்வதனால் சுவாச கோளாறுகள், பல பாதிப்புகள் ஏற்பட கூடும் என அந்நாட்டில் செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்பு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.
மக்களுக்கு ஆபத்து
ஈரானில், உலக சுகாதார அமைப்பின் அலுவலக அதிகாரிகள் அந்நாட்டு சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், எண்ணெய்யுடன் கூடிய மழை பெய்துள்ளமை மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்த கூடும் என அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மெயர் கூறியுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் தீவிரமடையும் பதற்றம்! சுட்டுவீழ்த்தப்படும் ஈரானிய குண்டுவீச்சு விமானங்கள்
இலங்கை கடற்பரப்பில் வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri