மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றநிலை! வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர வசதிகளை வழங்குவதற்காக தூதரகங்களுக்கு நிதி ஆதாரங்களை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் தீவிரமடையும் பதற்றம்! சுட்டுவீழ்த்தப்படும் ஈரானிய குண்டுவீச்சு விமானங்கள்
இலங்கையர்களின் பாதுகாப்பு
தற்போதைய சூழ்நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து செயற்படுவதாகவும், தூதரகங்கள் ஊடாக இது தொடர்பில் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் வேலைகளுக்காக இலங்கையர்களை பரிந்துரைப்பது தொடர்கின்றது என்று அதன் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அவர்கள் நால்வரும் தற்போது சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை கறிப்பிடத்தக்கது.
இலங்கை கடற்பரப்பில் வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
ரோஹினியை சிக்க வைக்க போட்ட பிளானில் மனோஜிற்கு ஏற்பட்ட நிலைமை... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு நடிகை VJ பார்வதி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam