இலங்கை கடற்பரப்பில் ஈரானுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் கொடுக்கும் அமெரிக்கா
இலங்கைக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் அமெரிக்காவால் தாக்கப்பட்ட ஈரானிய கப்பலான IRIS Dena கப்பலை மீட்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தடையாக இருப்பதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்திய கடற்படை ஏற்பாடு செய்த கூட்டு கடற்படை பயிற்சி மற்றும் துறைமுக வருகைக்கு குறித்த கப்பல் அழைக்கப்பட்டதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பஹாய் கூறினார்.
இந்த நிலையில் இந்தியா மற்றும் இலங்கைக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் அந்தக் கப்பல் தாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானியர்களின் சடலங்களை ஒப்படைக்க இலங்கை அரசு தயார் : ஈரான் அரசின் உத்தியோகபூர்வ கோரிக்கைக்காகக் காத்திருப்பு
கொடூரமான செயல்
தனது எக்ஸ் கணக்கில் ஒரு பதிவில், இந்த தாக்குதலை போர்க்குற்றத்திற்கு சமமான கொடூரமான செயல் என்று அவர் விவரித்தார்.
சம்பவத்திற்குப் பிறகு மாலுமிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா தடுத்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த மார்ச் 4ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இந்த கப்பல் விபத்துக்குள்ளானது.
IRIS Dena கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 104 பேர் காணாமல் போன நிலையில் 84 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 32 பேர் காயமடைந்துள்ளனர்.
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam