ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் - வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா
ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. சபை தீர்மானம் குறித்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது.
போர் நிறுத்தம் மற்றும் அவசரகால மனிதாபிமான உதவி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும், இந்த சவால்களில் இந்தியா எதிர்பார்த்த அம்சங்கள் வரைவு தீர்மானத்தில் இல்லை எனவும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டு வாக்கெடுப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் உக்ரைனில் நிலவும் மோசமான மனிதாபிமான விளைவுகளுக்கு கண்டனம் தெரிவித்து கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது193 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பொதுசபையில் 140 உறுப்பு நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், ரஷ்யாவுடன் இணைந்து பெலாரஸ், சிரியா, வட கொரியா, எரித்ரியா ஆகிய நாடுகள் தீர்மானத்திற்கு எதிராகவும் எதிர்த்து வாக்களித்துள்ளதுடன், தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.
மேலும், ‘ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகள் மோதலைத் தணிப்பதற்கு பங்களிக்க வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கையை மேம்படுத்துவதற்காக விரோத போக்கை உடனடியாக நிறுத்துவதற்கு உதவ வேண்டும், மக்களின் துன்பங்களுக்கு உடனடி முடிவு காண, இரு தரப்பையும் ஒன்றிணைக்கவேண்டும்’ என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
