கொழும்பில் விபத்தில் சிக்கி உயிரிழந்த நபரை அடையாளம் காண மக்களிடம் உதவி கோரல்
கொழும்பு - கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோக் வீதியில் பஸ் மோதி உயிரிழந்த நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்குக் கோட்டை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
இந்த விபத்து கடந்த பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸார் தகவல்
45 முதல் 50 வயது மதிக்கத்தக்க 5 அடி உயரமுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்றும், அவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் கோட்டை பொலிஸ் நிலையத்தின் 071 8591555 அல்லது 011 2323677 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
