இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முழுமையான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு இலங்கையிலுள்ள வெளிநாடுகளின் தூதுவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சவாலான காலப்பகுதியில் தமது ஆதரவையும் நல்லெண்ணத்தையும் வழங்குமாறு வெளிநாடுகளின் தூதுவர்களிடம் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளித்தல்
இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திர உறுப்பினர்களுக்கு இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளித்துள்ளார்.

எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் மின்வெட்டு போன்ற பிரச்சினைகளை குறித்து இராஜதந்திர உறுப்பினர்களுக்கு ஜி.எல். பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
21வது திருத்த சட்டம் தொடர்பில் விளக்கமளித்தல்
பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில் அரசாங்கம் முனனெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஜி.எல். பீரிஸ் எடுத்துரைத்துள்ளார்.
இலங்கைக்கு தேவைப்படும் நேரத்தில் தமது முழுமையான உதவிகளை வழங்குமாறு தூதுவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள அரசியலமைப்பின் 21வது திருத்த சட்டம் தொடர்பில் துாதுவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் அதில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.