எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு
நாளைய தினம் (வௌ்ளிக்கிழமை) எரிவாயு விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன் பிரகாரம் இதுவரையான நாட்களில் தினமொன்றுக்கு விநியோகிக்கப்பட்ட 50,000 எரிவாயு கொள்கலன்களுக்குப் பதில் நாளைய தினம் 16 ஆயிரம் சிலிண்டர்கள் மட்டுமே விநியோகிக்கப்படவுள்ளது.

இரண்டு இலட்சம் எரிவாயு கொள்கலன் விநியோகம்
கடந்த திங்கட்கிழமை தொடக்கம் இன்று வரை இரண்டு இலட்சம் எரிவாயு கொள்கலன்களை விநியோகித்துள்ளதாகவும், தற்போதைக்கு எரிவாயு கொள்கலன்கள் கையிருப்பு குறைந்துள்ளதன் காரணமாகவும் இவ்வாறு நாளைய விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும் வார இறுதியில் 3500 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பலொன்று வர உள்ளதாகவும் அதன் பின்னர் எரிவாயு விநியோகம் மீண்டும் வழமை நிலைக்குத் திரும்பும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.