கிளிநொச்சியில் சமையல் எரிவாயு கொள்கலன்களை பகிர்ந்தளிப்பதற்கான புதிய நடைமுறை ஆரம்பம்
கிளிநொச்சியில் சமையல் எரிவாயு கொள்கலன்களைப் பகிர்ந்தளிப்பதற்கான நடைமுறைகளைச் சீரான முறையில் மேற்கொள்ளப் பிரதேச செயலாளர் ஊடாக கிராம அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாவட்டச் செயலகத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறை
கிளிநொச்சியில் எரிவாயு பாவனையாளர்கள் தாங்கள் முன்பு கொள்வனவு
செய்த எரிவாயு விநியோகம் செய்யும் கடைகளிலிருந்து (முகவர்களிடமிருந்து) தமது
கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
எனவே சிரமங்களைத் தவிர்த்து தாங்கள் முன்பு கொள்வனவு செய்த கடைகளில் முன்பதிவினை மேற்கொள்ளும் அதே சந்தர்ப்பத்தில் முன்னுரிமை அடிப்படையில் எரிவாயு விநியோகத்தினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிராம அலுவலகங்களுக்கான அறிவித்தல்
இவ்விநியோக நடைமுறைகளைச் சீரான முறையில் மேற்கொள்ளப் பிரதேச செயலாளர் ஊடாக கிராம அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
எனவே இன்று முதல் மாவட்டத்திற்கான எரிவாயு வழங்குநர் நிலையத்தில் எந்த விதமான
விநியோகித்தல் நடைமுறைகளும் பின்பற்றப்படாது என்பதனை பாவனையாளர்களுக்கு
அறியத்தருவதாகவும்' தெரிவிக்கப்பட்டுள்ளது.



