கிண்ணியா பகுதிகளுக்கு தடுப்பூசியை விரைவில் வழங்குமாறு கோரிக்கை
திருகோணமலை -கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவில் கோவிட்-19 தடுப்பூசியை விரைவில் வழங்குமாறு கிண்ணியா ஜம்மியத்துல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது.
இக்கோரிக்கை கடிதத்தினை இன்று (31) தொலைநகல் மூலம் அனுப்பி வைத்துள்ளது.
கிண்ணியா பிரதேசத்தில் வேகமாக பரவி வரும் கோவிட் தொற்றின் காரணமாகவும் ,அதனால் ஏற்படும் மரண எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதனால் கோவிட் தடுப்பூசியினை இந்தப் பிரதேசத்தில் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறும் கோரியே இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள கோவிட் செயலணிக்கு அனுப்பி வைத்துள்ள ,இதேவேளை அதன் பிரதிகளை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் கிண்ணியா பிரதேச செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கிண்ணியா ஜம்மியத்துல் உலமா தெரிவித்துள்ளது.