க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி..! வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறு முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
பரீட்சார்த்திகளின் தகவல்களை புதுப்பித்து இறுதி செய்யும் பணி தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளதாக பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
பரீட்சை முடிவுகள் தாமதமாகலாம்
ஜூன் 15 ஆம் திகதி எதிர்பார்க்கப்பட்ட பரீட்சை முடிவுகள் வெளியீடு தாமதமாகலாம் என்று செய்திகள் வெளியான நிலையில் இந்த உத்தியோகபூர்வ அறிக்கை வெளியாகியுள்ளன.

பரீட்சை முடிவுகளை தயாரிக்கும் பணி இன்னும் நடைபெற்று வருவதாகவும், இப்பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சுமார் 4,50,000 பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றியுள்ளதாகவும், அவர்களின் தரவுகளை கணினிமயமாக்கும் பணி இன்னும் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முடிவுகளை வெளியிடுவதற்கான இறுதி பணிகள்
இதற்கமைய, அடுத்த வாரங்களில் முடிவுகள் தயாராகிவிடும் என்று திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், உயர்தர பரீட்சை திட்டமிட்டபடி ஆகஸ்ட் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.