இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - விரைவில் கைது செய்யப்படவுள்ள முக்கிய தலைவர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் அரசியல் தலைவர் ஒருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் உயர்மட்ட முக்கியஸ்தர்களுடன் வார இறுதியில் நடத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றிலேயே இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விரைவில் கைது
இதன்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் சரிவர முன்னெடுக்கப்பட வேண்டுமாக இருந்தால் மேற்குறித்த முக்கிய புள்ளி கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று புலனாய்வாளர்களும் அரசாங்கத்திடம் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இதன்படி, ஆரம்ப கட்டமாக இன்னும் ஒரு சில நாட்களில் குறித்த முன்னாள் அரசியல் தலைவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்ள பொலிஸ் திணைக்களம் உத்தேசித்துள்ளது.
இதனையடுத்து, குறித்த அரசியல் புள்ளி வழங்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO