ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கடற்றொழில் சமூகம் விடுத்துள்ள கோரிக்கை
நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிலே மூன்று பிரதான வேட்பாளர்கள் களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலே வட கிழக்கு கடற்றொழிலாளர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினையை அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளிக்கொண்டுவர வேண்டும் என அகில இலங்கை கடற்றொழிலாளர் தொழிற் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை பரிசீலித்து வட கிழக்கு இணைந்த கடற்றொழில் சமூகம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும்.
அவ்வாறு வெளிக்கொண்டு வரப்படும் செய்தியை இட்டு வட கிழக்கிலுள்ள கடற்றொழிலாளர்களும் ஏனைய மக்களும் ஒற்றுமையாக இணைந்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை கடற்றொழில் சமூகம் எடுக்க தீர்மானித்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள விடயங்களை தொகுத்து வருகின்றது கீழ்வரும் காணொளி..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
