அனுரகுமாரவின் கூட்டத்தில் சீருடைகளுடன் தாதியர் : விளக்கமளித்த தேர்தல் ஆணைக்குழு
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) தலைமையில் நடைபெற்ற தேசிய அகில இலங்கை தாதியர் மாநாட்டில், அரச தாதியர்கள் சீருடையில் கலந்து கொண்டமை குறித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.
அது, தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக அமையாது என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முன்னதாக, பல்வேறு தரப்பினரால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, பதில் அளித்துள்ள, தேர்தல்கள் ஆணைக்குழு, பொது ஊழியர்களை நிர்வகிக்கும் ஸ்தாபன சட்டத்தின் கீழ் அத்தகைய பங்கேற்பு அனுமதிக்கப்படுகிறது என்று நியாயப்படுத்தியுள்ளார்.
தேர்தல் விதிமுறைகள்
ஸ்தாபனச் சட்டத்தின்படி, இது தேர்தல் விதிமீறல் ஆகாது என்று கூறிய தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர், எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கும் உரிமை அரச ஊழியர்களுக்கு உண்டு என்பதை எடுத்துக்காட்டினார்.
இந்தநிலையில், தேசிய அகில இலங்கை தாதியர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுகாதார அமைச்சின் செயலாளர், தாதியர்களுக்கு கடமை விடுப்பு வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான பிரசாரம் என்ற கபே (CaFFE), மாநாட்டில் சீருடையில் அரசு தாதியர்கள் கலந்து கொள்வது நிறுவன விதிகள் மற்றும் தேர்தல் விதிமுறைகள் இரண்டையும் மீறுவதாகக் குற்றம் சாட்டி மறுப்புக் குரல் கொடுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |