முல்லைத்தீவில் தீப்பிடித்து எரிந்த கடைத்தொகுதிகள்
முல்லைத்தீவு (Mullaitivu) நகர்பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபையின் பொதுச்சந்தை கட்டத்தில் அமைந்துள்ள வணிக நிலையங்கள் இரண்டு தீ பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளன.
குறித்த தீவிபத்து சம்பவம் இன்று (30.07.2024) அதிகாலை வேளை இடம்பெற்றுள்ளது.
இதில், இரண்டு கடைகள் மற்றும் களஞ்சியம் ஒன்றும் தீ விபத்தின் போது சேதமடைந்துள்ளதுடன், கடையில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீயினால் எரிந்து சாம்பலாகியுள்ளது.
தீ விபத்து சம்பவங்கள்
இதேவேளை தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த தீவிபத்து சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பிரதேச சபையின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எனினும், முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தீ விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் தீவிபத்தினை கட்டுப்படுத்தும் தீயணைப்பு பிரிவு இல்லாத நிலை தொடர்ச்சியாக காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam