தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அதிரடி கைது
இலங்கை பொதுஜன பெரமுனவின் மூத்த உறுப்பினரும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) முன்னாள் தலைவருமான ரேணுக பெரேரா, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
56 அனுமதிப்பத்திரங்கள்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான 56 பயணிகள் சேவை அனுமதிப்பத்திரங்களை வழங்கியதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராக அவர் பதவி வகித்த காலத்தில் இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட நடைமுறை தொடர்பானவையே இக்குற்றச்சாட்டுகள் என தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணை மற்றும் அதனைத் தொடரும் சட்ட நடவடிக்கைகள் குறித்த மேலதிக விவரங்கள் அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதாகவும் பெரேரா மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.