மகிந்த ராஜபக்ச உயிருடன் இருக்கும் வரை மேடைக்கு அழைத்து வர திட்டமிடும் மொட்டுக் கட்சி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயிருடன் இருக்கும் வரை, அவரை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்த அரசியல் மேடைகளுக்கு சக்கர நாற்காலியில் வைத்தேனும் அழைத்து வருவோம் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வலுவான தலைவர்களைக் காண வேண்டும் என்ற விருப்பம் எப்போதும் மக்களிடம் உண்டு. எனவே எதிர்காலத்திலும் மகிந்த ராஜபக்சவை மக்கள் முன்னிலையில் கொண்டு வருவோம்.
மிகச்சிறந்த தலைவர்
சக்கர நாற்காலியில் வைத்தேனும் அவரை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம்.
மகிந்த ராஜபக்சவின் தற்போதைய உடல்நிலையைக் கருத்திற் கொண்டு ஏன் அவரை தொடர்ந்து மேடைக்குக் கொண்டு வருகின்றீர்கள் என கேள்வி எழுப்பப்படுகின்றது.
அவர் எங்கள் அரசியல் இயக்கத்தின் மிகச்சிறந்த தலைவர். ஆகவே, அவர் உயிருடன் இருக்கும் வரை அவரை மக்கள் முன்னிலைக்கு கொண்டு வருவோம்.

மேலும், அநுராதபுர பேரணி குறித்து விமர்சனங்களை முன்வைக்கும், தற்போது அமைச்சுப் பதவிகளை வகிக்கும் ஆட்சியாளர்கள் தங்கள் கடந்த காலச் செயற்பாடுகள் குறித்துச் சிந்திக்க வேண்டும்.
ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வெளியிடும் கருத்துக்களால் நாட்டிற்கு ஒரு பாரதூரமான மற்றும் ஆபத்தான நிலை உருவாகி வருகின்றது.
அரசாங்கத்தைக் கைப்பற்றிய போதிலும், தாங்கள் இன்னும் முழுமையான அரச அதிகாரத்தை அடையவில்லை என்று கூறும் இவர்கள், மற்றுமொரு போராட்டத்திற்கு தயாராகுமாறு அழைப்பு விடுக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிலிருந்து நள்ளிரவில் அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் சிக்கல்
YOU MAY LIKE THIS..