மட்டக்குளியில் பதற்றத்தை ஏற்படுத்திய கார் விபத்து: பலி 3ஆக உயர்வு - 8 பேர் படுகாயம்
கொழும்பு மட்டக்குளி பகுதியில் நேற்று இரவு(16.09.2026) நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர் ஆவார்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள், கொழும்பு 15, கிராண்ட்பாஸ் மற்றும் வத்தளையைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
8 பேர் படுகாயம்
அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று, சாலையில் வரிசையாக 3 முச்சக்கர வண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த அப்பகுதி மக்கள், காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
8 பேர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளிய பொலிஸார் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

6 நாளில் மோசமான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் செய்துள்ள கார்த்தியின் சர்தார் 2... தமிழகத்தில் இவ்வளவுதானா? Cineulagam
ஹவுதி தலைவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை... சவுதி அரேபியாவுக்கு இடியை இறக்கிய அமெரிக்கா News Lankasri