வங்கக்கடலில் இன்று உருவாகிறது முரசு புயல்
வங்கக்கடலில் நிலவும் தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று (நவம்பர் 1) ‘முரசு’ (Murasu) புயலாக வலுப்பெற உள்ளது.
இலங்கை வழங்கிய இந்தப் பெயருடன் உருவாகும் புயல், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரக் கடற்கரையை நோக்கிச் செல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நவம்பர் 3ஆம் திகதி ஆந்திராவின் நெல்லூர் – நரசாபூர் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.
பாதுகாப்பாக இருங்கள்
அப்போது மணிக்கு 90 முதல் 110 கி.மீ., அதிகபட்சமாக 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இதன் தாக்கத்தினால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.

இந்தநிலையில்,மத்திய மேற்கு வங்கக்கடல், ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் மறு அறிவிப்பு வரும் வரை கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தாலும், மக்கள் அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளைப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது.