மட்டக்களப்பில் 6 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்த நபருக்கு விளக்கமறியல்!
மட்டக்களப்பில் 6 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்த நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது பற்றி தெரியவருவதாவது, மட்டக்களப்பு பிரதேசம் ஒன்றில் குறித்த சிறுமியின் தாயார் வைத்தியசாலைக்கு செல்வதற்காக கடந்த 24 ஆம் திகதி சிறுமியை கணவனின் தாயாரை அழைத்து அவரின் பாதுகாப்பில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் கணவரின் தாயாரான மாமியார் இல்லாத நிலையில் சிறுமியை அவரது அப்பப்பா பாலியல் சீண்டல் செய்துள்ளார்.இதனையடுத்து அவரை அடித்து தாக்கியதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
விளக்கமறியல்
இது தொடர்பாக கிராம உத்தியோகத்தருக்;கு 25ஆம் திகதிமுறையிட்டதையடுத்து அவர் பொலிசாரிடம் தெரிவித்த நிலையில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அப்பப்பாவை பொலிஸார் கைது செய்திருந்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதவான் நீதிமன்றில் நேற்று (26) முற்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.