அணு ஆயுத தாக்குதல் தொடர்பான ஒத்திகை: புடினின் அதிரடி உத்தரவு - செய்திகளின் தொகுப்பு
உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளின் அதிருப்திக்கு இலக்கான விளாடிமிர் புடின், ஜனாதிபதி மாளிகை ஊழியர்களுக்கு திடீரென்று விடுத்த உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பு 24ஆம் நாளை எட்டியுள்ள நிலையிலும், இரண்டு நாட்களில் முடித்துக்கொள்வதாகக் கூறப்பட்ட போர் இன்னும் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் தான், ரஷ்ய ஜனாதிபதி மாளிகை ஊழியர்களுக்கு அணு ஆயுத தாக்குதல் தொடர்பான வெளியேறும் ஒத்திகை முன்னெடுக்க விளாடிமிர் புடின் அவசர உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது.
இது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும், ஜனாதிபதியின் திட்டந்தான் என்ன என்பது தொடர்பில் குழப்பமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,