அக்குரேகொட இரட்டை கொலை! சிவப்பு அறிவிப்பில் வெளிநாட்டில் சிக்கிய சந்தேகநபர் - வெளியான தகவல்
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மாலைத்தீவில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேகநபர் கொலையை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டில் பதுங்கியிருந்த குறித்த சந்தேக நபர், நேற்று முன் தினம் (04) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக சிறப்புப் பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 26 பேர் பலி - காயங்களுடன் சிறைக்குள் கைதிகள்: பலரது நிலைமை கவலைக்கிடம்..!
மாலைத்தீவிற்கு தப்பியோட்டம்
பஹ்ரைனிலிருந்து மாலைத்தீவிற்கு அவர் வந்தபோது, அந்நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் அவருக்கு சிவப்பு அறிவிப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இரட்டைக் கொலையை நிகழ்த்தியவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்கி, குற்றத்திற்கு நேரடியாக உதவியதாகவும் உடந்தையாக இருந்ததாகவும் இந்த நபர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் கொலையை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மேலதிக விசாரணைக்காக சந்தேகநபருக்கு 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக தென்மேற்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
காலி, படபொல, அத்கந்துர பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், இதற்கு முன்னர் பல்வேறு குற்றங்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்
போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக, 2025 அக்டோபர் 21 அன்று நீதிமன்றத்தால் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், போதைப்பொருள் வைத்திருந்தமை தொடர்பான மற்றொரு வழக்கில், 2025 டிசம்பர் 15 அன்று எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தாலும் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
பத்தேகம மற்றும் எல்பிட்டிய பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் ஹெரோயின் வைத்திருந்த குற்றத்திற்காக அவர் இதற்கு முன்னர் நீதிமன்றத்தால் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கு மாகாண குற்றப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.