ரஷ்ய படை வீரர்களிடமிருந்து நச்சு வாயு முகமூடிகள் மீட்பு
உக்ரைனில் கைது செய்யப்பட்டுள்ள ரஷ்ய படை வீரர்களிடமிருந்து நச்சு வாயு முகமூடிகள் (gas masks) கைப்பற்றப்பட்டுள்ளது.
உக்ரைன் பாதுகாப்புத்துறை வெளியிட்ட புகைப்படங்களில், ரஷ்ய வீரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில் நச்சு வாயு முகமூடிகள், நச்சு வாயுவிலிருந்து பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் இரண்டாம் உலகப்போர்க்கால தலைக்கவசங்கள் முதலானவை அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மேற்கத்திய நாடுகளின் தலைவர்களும், உக்ரைன் ஜனாதிபதியும் புடின் ரசாயன ஆயுதங்களைக் பயன்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ள நிலையில், தற்போது ரஷ்ய வீரர்களிடமிருந்து நச்சு வாயு முகமூடிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ரஷ்யா இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.





தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri

இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri
