காணாமல் போன இளம் யுவதி சடலமாக மீட்பு! - பொலிஸார் தீவிர விசாரணை (Photo)
பதுளையில் காணாமல் போனதாக கூறப்பட்டு தேடப்பட்டு வந்த களன் தோட்ட யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரத்தியேக வகுப்புக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பாமையை அடுத்து தேடப்பட்டு வந்த நிலையிலேயே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இவர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றபோது எடுத்து சென்ற புத்தகங்கள் மற்றும் உடமைகள் கஹட்டருப்ப பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலமாக மீட்கப்பட்ட யுவதி பதுளை, தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் கல்வி பயில்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை முல்லைத்தீவு – உடையார்கட்டு பகுதியிலும் 13வயதான சிறுமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
படங்கள் - மலர்வேந்தன்
தொடர்புடைய செய்தி....
மேலதிக வகுப்புக்கு சென்ற 18 வயது யுவதி மாயம்! பொலிஸார் தீவிர விசாரணை

