போதைக்கு அடிமையாக்கப்பட்ட உயர்தர மாணவி! பொலிஸார் அதிர்ச்சி
மாவத்தகம பகுதியில் போதை பொருளுக்கு அடிமையான க.பொ.த உயர்தர மாணவி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவத்தகம பொலிஸ் தலைமை ஆய்வாளர் ஆர்.எம்.எஸ்.ஏ. பத்மசிறி தெரிவித்துள்ளார்.
மாவத்தகம பகுதியில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான ஒரு மாணவி ஒருவரிடம் மாவத்தகம பொலிஸார் நடத்திய விசாரணையில், குறித்த விடயம் தெரியவந்துள்ளது.
போதைப் பழக்கத்திற்கு அடிமை
அவரது காதலன் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், அவர் ஹெரோயின் மற்றும் ஐஸ் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்த பழக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக ஆண்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது குறித்து நாம் அதிகமாகக் கேள்விப்பட்டிருந்தாலும், பெண் பிள்ளைகள் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைக்கு அடிமையாகி இருப்பதும் மாவத்தகம பகுதியில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தரப்பு அதிர்ச்சி வெளியிட்டுள்ளது.



