இலங்கையின் உயிர் மாய்ப்பு தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள்!
இலங்கையில் வருடத்தில் மூவாயிரத்து இருநூறு (3200) பேர் மனநலப் பிரச்சினைகள் காரணமாக உயிர் மாய்ப்பு செய்து கொள்கிறார்கள் என அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வருடத்திற்கு 80 மாணவர்கள் உயிர் மாய்ப்பு செய்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தின் மனநோய்களுக்கான நிபுணர் வெளியிட்டுள்ள தகவலின்படி,
மனநலப் பிரச்சினை
”நாட்டில் உயிர் மாய்ப்பு வீதம் அதிகரிப்பு இல்லையானாலும், உயிர் மாய்ப்பு பட்டியலில் இலங்கை 21வது இடத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக உயிர் மாய்ப்பு அதிகரிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மனநலப் பிரச்சினை ஏற்பட்டால், அங்கொடா தேசிய மனநல நிறுவனத்தின் 24 மணி நேர தொலைபேசி சேவையான 1926 ஐ அழைத்து ஆலோசனை பெறலாம் என்றும், இந்த அழைப்பிற்கு கட்டணம் அறவிடப்படுவதில்லை என்றும் அவர் கூறினார்.
பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை நாள் முழுவதும் கையடக்க தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளுக்கு அடிமையாகியுள்ளதால், இதுவும் ஒரு மனநோய் என்றே அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், நாட்டில் 15 முதல் 20 சதவீத மக்கள் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
30-40 வருடங்களாக மருத்துவமனையில்
சோகம், பாலியல் ஈடுபாடு குறைதல், தூக்கமின்மை, பசியின்மை, எரிச்சல் மற்றும் நடத்தை வேறுபாடுகள் இதற்கு காரணமாக குறிப்பிடப்படுகின்றன.
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளனர். ஐஸ், கஞ்சா மற்றும் ஹெரோயின் போதை காரணமாக மனநோய்கள் ஏற்படலாம். மற்றொரு மனநோய் டிமென்ஷியா. அதாவது, மறதி ஆகும்.
அங்கொடை மருத்துவமனையில் சுமார் 500 மனநோயாளிகள் குணமடைந்துள்ளனர். ஆனால் அவர்களது உறவினர்கள் அவர்களை அழைத்துச் செல்வதில்லை.
நோயாளர்களின் உறவினர்களின் முகவரிகளை சரிபார்த்தால், அந்த முகவரிகளில் அவர்கள் இல்லை. இந்த நோயாளிகள் 30-40 வருடங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்கள் குணமடைந்தாலும், அவர்களது குடும்பங்களின் நிதிப் பிரச்சினைகள் காரணமாக யாரும் அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லத் தயாரில்லை” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



