மேலதிக வகுப்புக்கு சென்ற 18 வயது யுவதி மாயம்! பொலிஸார் தீவிர விசாரணை
பதுளை – களன் தோட்டத்தை சேர்ந்த 18 வயதான யுவதியொருவர் காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த யுவதி மேலதிக வகுப்புக்கு செல்வதாக தெரிவித்து நேற்றைய தினம் வீட்டிலிருந்து சென்று இதுவரை வீடு திரும்பாத நிலையில், காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் அவரது தாயாரினால் கஹட்டருப்ப பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பதுளை கோபோ பகுதியில் உள்ள நீர்நிலை ஒன்றிற்கு அருகில் குறித்த யுவதி எடுத்துச்சென்ற புத்தகப்பை, கையடக்கத் தொலைபேசி மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன கஹட்டருப்ப பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கஹட்டருப்ப பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 9 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri