தாஜுதீன் கொலை : சானி அபேகர தொடர்பில் திடுக்கிடும் தகவல் வழங்கிய மொட்டுக் கட்சி
தாஜுதீன் கொலையில் கோட்டாபய, நாமலுக்கு தொடர்பிருப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பணிப்பாளரான சானி அபேசேகர பொய்சாட்சிகளை உருவாக்கிய காணொளிகள் தன்னிடம் இருப்பதாக மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
இணையத்தள தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கஜ்ஜா ராஜபக்சக்களுடனான தொடர்பு
தொடர்ந்துரையாற்றிய அவர், முன்னாள் பொலிஸ் பரிசோதகர் சுமித் பெரேரா தான் தாஜுதீன் கொலை தொடர்பில் விசாரணை நடத்தியவர்.
அவர் 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு பொலிஸ் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் பெற்றார். இவரை வாக்கு மூலம் பெறுவதற்காக தினமும் கொழும்புக்கு அழைத்துள்ளனர்.
அச்சந்தர்ப்பத்தில் ஒரு நாள் புலனாய்வு துறைக்கு அவர் வந்த போது, சானி அபேசேகர அவரின் வாகனத்தில் இவரை ஏற்றிக் கொண்டு பொறளை மயானம் பகுதியில் வைத்து உனக்கு பதவி உயர்வு தருகிறேன் மற்றும் சன்மானம் தருகிறேன், தாஜுதீன் கொலையில் கோட்டாபய மற்றும் நாமலுக்கு தொடர்பு உள்ளது என சொல்லவும் என கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் அவர் நான் எப்படி பொய் கூறுவது, இதன் சாட்சியங்களை நான் பரிசோதனை செய்தேன் என்கிறார்.இதற்கான காணொளியும் என்னிடம் இருக்கிறது. அதேபோல கஜ்ஜா ராஜபக்சக்களுடன் எவ்வித தொடர்பும் இல்லை என பொதுமக்கள் மற்றும் பொலிஸ், புலனாய்வு பிரிவு என அனைவரும் அறிவர்.
சானி அபேசேகர பொய் சாட்சிகளை
ராஜபக்சர்ககள் தொடர்பில் கஜ்ஜா நிறைய இரகசியங்கள் கூறியுள்ளார். அவ்வாறென்றால் அரசு ஏன் கஜ்ஜாவை கைது செய்யவில்லை.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரே கஜ்ஜா, தாஜுதீன் தொடர்பில் கருத்து தெரிவிக்கிறார்.
ஆறு மாதங்கள் வரை ஏன் அவரை விசாரணை செய்யவில்லை. ஏனென்றால் ராஜபக்சக்களுடன் கஜ்ஜாவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதால் ஆகும்.
கஜ்ஜா கொலையில் ராஜபக்சக்கள் தொடர்பு என அவரின் மனைவி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்தார்.
ஆனால், பின்னர் போதைப்பொருள் தொடர்பிலான பிரச்சினையிலேயே அவர் கொல்லப்பட்டதாக தெரியவருகிறது.
சானி அபேசேகர பொய் சாட்சிகளை உருவாக்க வல்லவர் என்பது நாம் அறிந்த விடயமாகும்.
இவ்வாறான பொய்ச் சாட்சிகளே உருவாக்கப்படுகிறது. இவற்றை நாம் எவ்வாறு நம்புவது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



