சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை கைப்பற்றிய ரியல் மெட்ரிட்
ஐரோப்பிய கழகங்களுக்கிடையிலான 'UEFA' சம்பியன்ஸ் லீக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் பொருசியா டோர்ட்மன் அணியை எதிர்கொண்ட ஸ்பெயினின் ரியல் மெட்ரிட் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
குறித்த போட்டியானது, நேற்றைய தினம் (01.06.2024) சனிக்கிழமை லண்டனில் உள்ள வெம்ப்லே மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் டோர்ட்மன் அணிக்கு 3 தடவைகள் கோல் அடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் அவை நழுவ விடப்பட்டன.
அதிகமுறை வெற்றிபெற்ற அணி
போட்டியின் முதல் கோலை ரியல் மெட்ரிட் அணியின் டேனி கர்வஜால் 74ஆவது நிமிடத்தில் அடிக்க இரண்டாவது கோலை வினிசியஸ் ஜூனியர் 83ஆவது நிமிடத்தில் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
இதன் மூலம், ரியல் மெட்ரிட் அணி பொருசியா டோர்ட்மன் அணியை வீழ்த்தி கிண்ணத்தை சுவீகரித்தது.
இந்த கிண்ணத்தை வெற்றிகொண்டதன் மூலம் ரியல் மெட்ரிட் அணி 15ஆவது முறையாக சம்பியன்ஸ் லீக் தொடரை வெற்றிக்கொண்டு அதிகமுறை கிண்ணத்தை சுவீகரித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
அதற்கு அடுத்தபடியாக உள்ள ஏசி மிலான் அணி 7 தடவைகள் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |