சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக்
இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக்(Dinesh Karthik) சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
38 வயதான தினேஷ் கார்த்திக் 94 ஒருநாள் போட்டிகளில் 2392 ஓட்டங்களையும், 26 டெஸ்ட் பொட்டிகளில் 1025 ஓட்டங்களையும் 60 டி20களில் 686 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
இந்திய அணியில் 2004 முதல் விளையாடி வரும் இவர் ஐபிஎல்லின் ஆரம்பத்தில் டில்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார்.
பின்னர் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியதோடு இறுதியாக பெங்களூரு அணிக்காக விளையாடி பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டார்.
It's official ?
— DK (@DineshKarthik) June 1, 2024
Thanks
DK ?? pic.twitter.com/NGVnxAJMQ3
கிரிக்கெட் வர்ணனை
கிரிக்கெட் விளையாடுவதுடன் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பணியாற்றி தற்போது வருகிறார்.
இந்த நிலையில், தற்போது தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிவிப்பு அறிக்கையில்,
“கடந்த சில நாள்களாக எனக்குக் கிடைத்து வரும் அன்பும், ஆதரவும் உண்மையில் நெகிழ்ச்சியடைய வைத்தது. என்னை இப்படி உணர வைத்ததற்காக ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் சார்ந்திருக்கும் அனைத்து விதமான கிரிக்கெட் விளையாட்டிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |