உக்ரைனுடனான பேச்சுவார்த்தைக்கு தயார்: அமெரிக்காவின் செயற்பாடு குறித்து புடின் கடும் விமர்சனம்
உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு புடின் வழங்கிய செய்வியினை மேற்கோள்காட்டியே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் புடின் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அமைதி ஒப்பந்தம்
''கடந்த 2022ம் ஆண்டு போர் ஆரம்பிப்பாதற்கு முன்னர் நடந்த பேச்சுவார்த்தையில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு ரஷ்யாவும், உக்ரைனும் தயார் நிலையில் இருந்தன.
ஆனால், மேற்கத்திய நாடுகளின் குறிப்பாக அப்போதைய பிரித்தானிய பிரதமர் போரீஸ் ஜான்சன் தலையீட்டினால் ஒப்பந்தத்தில் இருந்து இறுதி நேரத்தில் உக்ரைன் பின்வாங்கியது.
இதன்படி எதிர்வரும் காலங்களில் மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் அமைதி குறித்து சிந்திக்க வேண்டும். இன்றைய நிலவரத்தை புரிந்து கொண்டு, நாட்டின் நலனுக்காக போரிடும் ரஷ்யாவுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவேண்டும். ரஷ்யாவும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது.
உக்ரைனுக்கு, அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கி போரை தூண்டுவது ஏன்? இந்த போர் நீடிக்க வேண்டும் என விரும்புகிறதா? இதற்கான காரணம் என்ன?
அமெரிக்காவின் தலையீடு
உக்ரைனுக்காக, அமெரிக்கா, போலந்து, ஜார்ஜியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வாடகைப்படையினர்களும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், மேற்கத்திய நாடுகள், அந்நாட்டு மக்களை ரஷ்யாவால் அச்சுறுத்தல் என பயமூட்டி வைத்துள்ளன. மேலும், மேற்கத்திய நாடுகளின் கவலையைப் போல், ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தியது கிடையாது.
அத்தோடு போலாந்து, லாட்வியா நாடுகளை ரஷ்யா தாக்கியது கிடையாது. அந்நாடுகள் மீது நாங்கள் ஆர்வம் காட்டியதும் கிடையாது.
1991ம் ஆண்டிற்கு பிறகு, ரஷ்யாவை மேற்கத்திய நாடுகள் புரிந்து கொள்ள தவறிவிட்டன. இதற்கமைய பொருளாதார ரீதியாக வளர்ந்து வருவதால், ரஷ்யாவை காட்டிலும் சீனா மீது மேற்கத்திய நாடுகளுக்கு அதிகமாகிவிட்டது'' என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |