தள்ளுபடி செய்யப்பட்ட வர்த்தக வழக்கை மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
வணிகவியல் மேல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை மையமாகக் கொண்டு, முன்னர் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு ஒன்றின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் ரத்துச்செய்துள்ளது.
அத்துடன், குறித்த வழக்கை, மீண்டும் விரைவாக விசாரணை செய்து முடிக்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விரைவான விசாரணை
தனியார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கின் கோரிக்கை தொகையானது, வணிகவியல் மேல் நீதிமன்றத்தின் குறைந்தபட்ச அதிகார வரம்பு வரம்பை (50 மில்லியன் ரூபாய்) எட்டவில்லை என்றும், வழக்குத் தொகை செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டி, 2024 ஆம் ஆண்டில் வணிகவியல் மேல் நீதிமன்றம் குறித்த வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.

எனினும் இது தொடர்பான மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம், வணிகவியல் மேல் நீதிமன்றில் தீர்ப்பை ரத்துச்செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக பரிவர்த்தனை என்ற சொல்லைப் பரந்த மற்றும் நோக்கம் சார்ந்த முறையில் பொருள் கொள்ள வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
எனவே, வழக்கை விரைவாக விசாரணை செய்து முடிக்குமாறு வணிகவியல் மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், பிரதிவாதிக்கு வழக்குச் செலவுகளையும் விதித்துள்ளது.
தீவிரமடையும் வானிலையினால் பல பகுதிகளுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்