சிறைக்குள் மந்திராலோசனை நடத்தும் நாமல்! மகிழ்ச்சியை ஏற்படுத்திய நண்பன் - கொந்தளித்த ஜோன்ஸ்டன்
சிறையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச, அங்கிருந்து கொண்டே அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாமல் ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்ட சிறையில் அறையில், நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு மேலும் சாதகமாக மாறியுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றத்திற்கு நாமல் அழைத்துச் செல்லும் போது, தன்னுடன் பயணிக்க நண்பர் ஒருவர் கிடைத்துள்ளதாக, சாமர சம்பத்தின் முதுகில் தட்டியவாறே கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
நாமல் மந்திராலோசனை
இதேவேளை, பொதுஜன பெரமுன கட்சியின் அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்து, சிறைச்சாலைக்குள் வைத்து நாமல் மந்திராலோசனை நடத்தியுள்ளார்.

கடந்த வாரம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக வந்த வேளையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் கலந்து கொண்டனர். இதன்போது கிராமம் கிராமமாக நடத்தும் கூட்டங்களை, தான் இல்லை என்பதற்காக நிறுத்தாமல் தொடர்ந்து முன்னெடுக்குமாறு நாமல் அறிவுறுரை வழங்கியுள்ளார்.
அடுத்த வாரம் கூட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக தொகுதி அமைப்பாளர்களை வரவழைத்து, கிராமம் கிராமமாக கூட்டங்களை நடத்துவது குறித்தும் அதன் முன்னேற்றங்களை கண்காணிக்கவுள்ளதாக டி.வி சாணக இதன்போது தெரிவித்துள்ளார்.
கிராமம் கிராமமாக கூட்டங்கள்
அடுத்த வாரம் ஐந்து நாட்களும் கிராமம் கிராமமாக கூட்டங்கள் நடத்தப்படும் என கூறியுள்ளார்.

அதேவேளை, எங்களை சிறையில் அடைத்து எங்களது அரசியலை நிறுத்த முடியாது என ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ ஆவேசத்துடன் கூறியதாக தெரிய வருகிறது.
இந்த கலந்துரையாடலின் போது நாமலைப் பார்ப்பதற்காக சில பௌத்த பிக்குகளும் வருகை தந்திருந்தனர். நலம் விசாரித்ததுடன் ஆசி வழங்கியதுடன், பிரித் நூலும் கட்டியுள்ளனர்.
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri