ஞானசார தேரருக்கு 18 மாதங்களே சிறைத்தண்டனை - ஜனாதிபதி பொதுமன்னிப்பு கோரும் UNP..!
பொது பல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி அவசர கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
உடனடியாக ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என அந்த கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டதன் மூலம் இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி பொதுமன்னிப்பு
இதற்கமைய, ஞானசார தேரரை விடுதலை செய்வது தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாகிரக போராட்டம் மூன்று பீடங்களின் மாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கமைய தற்காலிக அடிப்படையில் கைவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கூற்றுக்கமைய நீதிமன்ற அவதூறு குற்றச்சாட்டுக்கு அதிகபட்சமாக 18 மாதங்களே சிறை தண்டனை விதிக்க முடியும் என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் ஞானசார தேரர், இதுவரையில் சுமார் 10 மாதங்களுக்கு அதிகமாக சிறையில் தண்டனை அனுபவித்து வருவதாக கட்சி சுட்டிக்காட்டி உள்ளது.
இதற்கு முன்னரும் மாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கமைய ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கட்சி சுட்டிக்காட்டி உள்ளது.
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிடம் ஜனாதிபதியே பொது மன்னிப்பு தொடர்பில் மேலும் ஞானசார தேரரின் காவியுடை களையப்பட்ட விவகாரம் தொடர்பிலும், அவரது காவி உடை களைவதற்கு உத்தரவிட்ட தரப்பினர் தொடர்பிலும் உடனடியாக கிரமமான விசாரணைகள் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri
சட்டை கசங்காமல் 500 கோடி வசூல் செய்ய ரஜினியால் மட்டுமே முடியும் - அல்லு அர்ஜுன் பதிவு படுவைரல்! Manithan