பாரம்பரிய அரசியல் வம்சங்களினால் இனியும் மக்களை ஏமாற்ற முடியாது..! பிரேசில் ஜனாதிபதிக்கு அநுர வாழ்த்து
பிரேசிலில் நடைபெற்று முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அந்நாட்டின் தலைவர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றியானது ஊழல், பிரிவினைவாதம் மற்றும் அரசியல் ரீதியிலான ஏமாற்றுகளுக்கு எதிராகப் பெறப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என்றும் அவர் அவருடைய வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களை இனியும் ஏமாற்ற முடியாது..
அந்த பதிவில் மேலும் குறிப்பிடப்படுவதாவது,
பிரேசில் மக்கள் வெறும் ஒரு தேர்தல் வெற்றியை மட்டும் பெறவில்லை, இன்று பிரேசில் மக்கள் ஒரு தேர்தலில் மட்டும் வெற்றி பெறவில்லை, மாறாக ஊழல், பிரிவினைவாதம் மற்றும் அரசியல் ரீதியிலான பொய்களை அவர்கள் தோற்கடித்துள்ளனர்.

மேலும், காலாவதியான அரசியல் சக்திகளாலும், பாரம்பரிய அரசியல் வம்சங்களாலும் மக்களை இனிமேலும் ஏமாற்ற முடியாது என்பதை லூலாவின் வெற்றி தெளிவாக நிரூபித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
தோல்வியடைந்த அரசியல் வம்சங்களாலும், “அதிகாரமே சிறந்தது” என நம்பும் கடந்தகாலப் பேய்களாலும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை தோழர் லூலாவின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி லூலாவின் தலைமையைப் பாராட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரேசிலின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு தனது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
மீண்டும் ஒருமுறை முன்னேற்றப் பாதையை நோக்கி வழிநடத்துவதற்கு எனது நல்வாழ்த்துகள், தோழரே! எனக் குறிப்பிட்டுள்ளார்.
Today, the people of Brazil did not just win an election; they defeated the forces of corruption, division and political lies. Comrade @LulaOficial’s historic victory in Brazil shows that the people cannot be fooled by bankrupt political dynasties and the ghosts of the past who believe might is greater than right. Many congratulations, companheiro, for leading the march of progress yet again!
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) October 26, 2026
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam
வெளிநாட்டில் இருக்கேன், சொல்லாம போறீங்களே அப்பா.. செஃப் தாமு மறைவால் கண்ணீர் விட்டு கதறும் புகழ் Cineulagam
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri