இலங்கையில் வங்கி கடன் அட்டைகள் பயன்படுத்துவோர் தொடர்பில் வெளியான தகவல்

Central Bank of Sri Lanka Economy of Sri Lanka Sri Lanka Fuel Crisis Sri Lanka Banks
By Dhayani Oct 26, 2026 04:19 AM GMT
Report

இலங்கையில் வங்கி கடன் அட்டை (Credit Card) பயன்பாடு மற்றும் நிலுவையில் உள்ள கடன் தொகை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு ஒகஸ்ட் மாத நிலவரப்படி, இலங்கையில் கடன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை 213 பில்லியன் ரூபாயை தாண்டியுள்ளது.

உச்சத்தை எட்டியுள்ள கடன் தொகை

மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய நிதித் தரவுகளின்படி, இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாத நிலவரப்படி இத்தொகை உச்சத்தை எட்டியுள்ளது.

இலங்கையில் வங்கி கடன் அட்டைகள் பயன்படுத்துவோர் தொடர்பில் வெளியான தகவல் | Credit Card Debt Increases

இதுவரை வழங்கப்பட்ட கடன் அட்டைகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 223 மில்லியனாக உள்ளது. இந்த ஆண்டில் மட்டும், 130,000 இற்கும் மேற்பட்ட அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த புள்ளிவிபரங்களுடன் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, கடன் அட்டைகள் மூலம் செலுத்த வேண்டிய கடன் விகிதம் இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளது.

ஜனவரி 2025-ல், கடன் அட்டைகள் மூலம் செலுத்த வேண்டிய கடன் தொகை 155 பில்லியன் ரூபாயாக இருந்தது. ஜனவரி 2026-க்குள் இவை 190 பில்லியனை தாண்டியுள்ளது.

இதனால், கடன் அட்டைகள் மூலமான கடன் வாங்கும் விகிதம் நவம்பர் 2025 முதல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தில் தாக்கம்

டிசம்பர் மாதத்திற்குள், கடனின் அளவு 180 பில்லியன் ரூபாயாக தாண்டியது. இவை பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தில் தாக்கம் செலுத்தியுள்ளதுடன், பலர் கடனில் நுகர்வு செய்யத்தொடங்கியுள்ளனர்.

இலங்கையில் வங்கி கடன் அட்டைகள் பயன்படுத்துவோர் தொடர்பில் வெளியான தகவல் | Credit Card Debt Increases

மேலும், தங்கத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவதும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தங்கத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவதும், கடன் அட்டைகள் மூலம் கடன் வாங்குவதும் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவில் நெருக்கடியை எற்படுத்தியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும், உயர்ந்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணங்கள் உள்ளிட்ட பணவீக்க சுமையும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதுடன், வரிகள், அபராதங்கள், வட்டி மற்றும் பணவீக்கம் ஆகியவற்றின் அதிகரிப்புக்கு ஏற்ப வருமானம் அதிகரிப்பதில்லை என்றும், இந்த இடைவெளியை நிரப்ப மக்கள் கடன் வாங்க வேண்டியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.  

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்வெட்டுக்கு காரணம் வெளியானது

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்வெட்டுக்கு காரணம் வெளியானது

 

பசில் ராஜபக்சவுக்கு பிறப்பிக்கப்பட்ட சர்வதேச சிவப்பு பிடியாணை! அமெரிக்காவிலும் சிக்கல்

பசில் ராஜபக்சவுக்கு பிறப்பிக்கப்பட்ட சர்வதேச சிவப்பு பிடியாணை! அமெரிக்காவிலும் சிக்கல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US