2026 சாதாரண தர அழகியல் செய்முறைப் பரீட்சை - வெளியான முக்கிய அறிவிப்பு..!
நாட்டின் தொடர் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், 2026ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2026ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்குரிய செய்முறைப் பரீட்சைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதிகளில் இடம்பெறும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை பரீட்சை
அதற்கமைய, குறித்த பரீட்சைப் பணிகள் நாளை(27.10.2026) முதல் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணைகள் உரிய அதிபர்களுக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்கள் தங்களது விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri
வெளிநாட்டில் இருக்கேன், சொல்லாம போறீங்களே அப்பா.. செஃப் தாமு மறைவால் கண்ணீர் விட்டு கதறும் புகழ் Cineulagam