பொய்யான தகவல்களை வெளியிட்டு நாட்டில் பரபரப்பை ஏற்படுத்த முயன்ற தேரர்! அம்பலமான உண்மை
சமகால அநுர அரசாங்கத்திற்கு எதிராக பாரிய மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பலைகளை ஏற்படுத்தும் முயற்சியில் எதிர்க்கட்சியினர் தீவிரமான முன்னெடுத்து வருகின்றனர்.
அதற்கமைய பொய்யான தகவல்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்த முனைந்த, பலங்கொட கஸ்ஸப தேரருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குருந்துவத்தை பொலிஸார், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமக முன்னிலையில் இன்று தெரிவித்துள்ளார்.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தின் போது, மக்களை கோபமூட்டும், தவறாக வழிநடத்தும் மற்றும் மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் தேரர் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளார்.
பெலவத்தையிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் கட்சி அலுவலகத்திலிருந்து இது தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸில் முறைப்பாடு
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 22ஆம் திகதி விகாரமகாதேவி பூங்காவிற்கு இரண்டு கத்திகளுடன் வந்த நபர்கள் தொடர்பாக பலங்கொட கஸ்ஸப தேரர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

குறித்த அறிக்கையானது முற்றிலும் பொய்யானது மற்றும் மக்களை வழிதவறச் செய்யக்கூடிய தவறான செயல் என நீதிமன்றில் தகவல் சமர்ப்பித்த பொலிஸார் குறிப்பிட்டனர்.
கத்திகளுடன் வந்த நபர்களை பெலவத்தையிலுள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகமே அனுப்பியதாக கஸ்ஸப தேரர் கூறிய கருத்து முற்றிலும் பொய்யானது என பொலிஸார் கூறியுள்ளனர்.
இதன் மூலம் பொதுமக்களின் நம்பிக்கை சீர்குலைக்கப்பட்டுள்ளதாக றைப்பாட்டாளர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் மேலும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள அர்னாப்! இலங்கை மீதான பாதிப்பு குறித்து வெளியான புதிய அறிவிப்பு
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam
சட்டை கசங்காமல் 500 கோடி வசூல் செய்ய ரஜினியால் மட்டுமே முடியும் - அல்லு அர்ஜுன் பதிவு படுவைரல்! Manithan