கட்சிப் பதவிகளில் இருந்து விலகினார் ரவிகரன்
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உள்ளூர் அதிகாரசபைகளுக்கான இலங்கைத் தமிழ்அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னிமாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளதாக அறியமுடிகின்றது.
அந்த வகையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைச் செயலாளர் மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசக் கிளைத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தே நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் இவ்வாறு பதவி விலகியுள்ளதாக அறியமுடிகின்றது.
கடிதத்தின் மூலம் அறிவிப்பு
அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தாம் கட்சிப்பதவிகளிலிருந்து விலகும் இந்த முடிவை கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோருக்கு 24.06.2025ஆம் திகதிய கடிதத்தின் மூலம் அறிவித்திருப்பதாகவும் மேலும் அறியக்கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 19 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam