சீ.வி.கே - சாணக்கியனுக்கு இறுதி நேரத்தில் நடந்தது என்ன! அச்சத்தில் NPP அமைச்சர்கள்
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரிய 'அணையா விளக்கு' போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.
இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன் தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் பங்கேற்றனர்.
இவ்வாறு அணையா விளக்கு போராட்டத்தில் பங்கேற்பதற்காக போராட்ட களத்திற்கு சென்ற, அமைச்சர் சந்திரசேகரன், இரா.சாணக்கியன் மற்றும் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் மக்களால் அடித்து துரத்தப்பட்டனர்.
செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரிய மேற்கொள்ளப்பட்ட இந்த போராட்டத்தில், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் கலந்துகொண்டார்.
இந்நிலையில், ஐ.நா ஆணையாளரிடம் நீதிக்கான கோரிக்கையை முன்வைக்க மக்கள் தயார்நிலையில் இருந்தபோது துரத்தியடிக்கப்பட்ட அரசியல்வாதிகள் களத்தில் இருந்தால் இங்கு இனப்படுகொலை நடக்கவில்லை எனவும் செம்மணியில் கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களுக்கு வேறு கதைகளை கூறுவார்கள் எனவும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது தொடர்பான முழு விடயங்களையும் அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...,
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri