கடுமையான பழிவாங்கலுக்கு தயாராகி வரும் ஈரான்..வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு!
ஈரானின் புரட்சிகர காவல்படை கட்டளை மையத்தின் தலைவர் அலி ஷாட்மானி இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்ததை ஈரான் உறுதிபடுத்தியுள்ளது.
ஷாட்மானி, அந்நாட்டின் மீதான இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களின் போது ஏற்பட்ட காயங்களால் இறந்ததாக ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஷாட்மானி படுகொலை
அதேவேளை, அவரது கொலைக்கு கடுமையான பழிவாங்கல் வழங்குவதாக ஈரானிய காவல்படையின் கட்டளை மையம் உறுதியளித்ததாகவும் குறித்த அரச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கடந்த ஜூன் 17ஆம் திகதி அன்று இஸ்ரேலிய இராணுவம், ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியாகவும், மிக மூத்த இராணுவத் தளபதியாகவும் அடையாளம் காட்டிய ஷாட்மானியைக் கொன்றதாகக் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது குறித்த தகவலை ஈரானிய காவல்படையின் கட்டளை மையம் ஈரானிய அரச ஊடகங்கள் உறுதிபடுத்தியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri