போர் நிறுத்தம் தொடர்பில் அலி கமேனியின் நிலைப்பாடு...
போர் நிறுத்தம் தொடர்பில் ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த நபராகக் கருதப்படும் நபரான அயதுல்லா அலி கமேனியிடம் இருந்து எந்தவொரு பொது ஒப்புதலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை ஈரானின் ஜனாதிபதி உட்பட சில மூத்த ஈரானிய அதிகாரிகளும் அமைப்புகளும் நேற்று(24) உறுதிப்படுத்தினர்.
இருப்பினும், நாட்டின் உச்ச தலைவரான அலி கமேனியே பொதுவாக அரச விடயங்களில் இறுதி முடிவுகளை மேற்கொள்வார்.
சர்வதேசத்தின் கவனம்
இந்நிலையில், போர் நிறுத்தம் குறித்து அவர் எப்போது கருத்து தெரிவிப்பார் என்பதில் சர்வதேசத்தின் கவனம் திரும்பியுள்ளது.

கமேனி மத்திய தெஹ்ரானில் உள்ள தனது இல்லத்தை விட்டு வெளியேறி இப்போது ஒரு பாதுகாப்பான பதுங்கு குழியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கடைசியாக ஜூன் 18 அன்று அரசு தொலைக்காட்சியில் முன் பதிவு செய்யப்பட்ட செய்தியில் தோன்றினார்.

அதில் அவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிபந்தனையற்ற சரணடைதல் அழைப்பை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri