உக்ரைனில் கோர தாக்குதல்..! பலர் பலி
தென்கிழக்கு உக்ரைனில் ரஷ்ய விமானப் படை நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் ஒரு தொடருடந்து ஆகியவை சேதமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், வடகிழக்கு நகரமான சுமியில் நடந்த ஏனைய தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நேட்டோ மாநாடு
நெதர்லாந்தில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டிற்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சென்றிருந்த போதே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான மேலும் தடைகள் குறித்து விவாதிக்க உச்சி மாநாட்டின் போது வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam