ஊடக சுதந்திரத்தில் இலங்கையின் தற்போதைய நிலை
2025ஆம் ஆண்டுக்கான உலக ஊடக சுதந்திர குறியீட்டில் (World Press Freedom Index) இலங்கை கடந்த ஆண்டைவிட முன்னேற்றம் கண்டுள்ளது என சர்வதேச ஊடக அமைப்பான எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு அல்லது ஆர்.எஸ்.எப் (RSF) அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும், இலங்கையின் ஊடக சுதந்திர நிலை இன்னும் குறைவாகவே உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில், ஊடக சுதந்திரத்தின் குறைபாடுகள் கடந்த 2009ஆம் ஆண்டு முடிவுற்ற சிவில் போருடன் நேரடியாக தொடர்புடையவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகத்தில் ஊடக சுதந்திரம் மிகுந்த நாடாக
குறிப்பாக, போர் இடம்பெற்ற காலத்தில் பல்லாயிரக்கணக்கான செய்தியாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் இன்றுவரை பொறுப்புகூறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 2.2 கோடி மக்களுடன் கூடிய நாட்டில் ஊடகத்துறை இன்னும் ஆபத்தான ஒன்றாகவே இருந்து வருகிறது என குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் ஊடகத் துறையில் பல்வகைமை குறைவாகவே உள்ளதாகவும் அது மிகுந்த அரசியல் கும்பல்களின் கட்டுப்பாட்டிலும் ஆற்றலின்பேரிலும் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் இலங்கை 180 நாடுகளுள் 150வது இடத்தில் இருந்தது. ஆனால் 2025ஆம் ஆண்டில் அது 139வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலகத்தில் ஊடக சுதந்திரம் மிகுந்த நாடாக நோர்வே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
