பிரித்தானியாவில் நடைபெறவுள்ள கென்ட் பிரீமியர் லீக் கரப்பந்தாட்ட போட்டி
பிரித்தானியாவில் ஈழத்தமிழர்களால் பல ஆண்டுகளாக கழக ரீதியில் விளையாடப்படும் Kent premier league போட்டி எதிர்வரும் 31/08/2025 அன்று மூன்றாவது முறையாக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியானது தென்கிழக்கு இலண்டனில் உள்ள Abbeywood என்னும் பகுதியிலுள்ள வெளியக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
பிரிமியர் லீக் போட்டி
இந்த KPL போட்டிக்காக 12 பிரிமியர் லீக் அணிகளில் விளையாடுவதற்காக 72 வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏல நிகழ்வானது எதிர்வரும் 09/07/2025 புதன்கிழமை மாலை Shooter’s Hill Sixth Form College கேட்போர்கூட மண்டபத்தில் நேரலை ஒளிபரப்புடன் நடைபெறவுள்ளது.
அத்துடன் இந்த KPL போட்டியின் சிறப்பம்சமாக வளர்ந்து வரும் புதிய கழகங்களிற்கான போட்டியும் நடைபெறவுள்ளது.
கடந்த இரு ஆண்டுகள் பல ஆயிரம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக நடைபெற்ற இந்த பிரிமியர் லீக் போட்டியானது இந்த ஆண்டும் மூன்றாவது முறையாக KPL குழும நிர்வாகிகளான ரகு, கிரி, கிருஷ்ணா, சுபாஷ் மற்றும் சுரேஷ் ஆகியோரின் ஏற்பாட்டில் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 16 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri

இந்தியாவின் புதிய ஏவுகணை சோதனை., இந்திய பெருங்கடலில் 2,530 கிமீ ஆபத்தான பகுதியாக அறிவிப்பு News Lankasri
