சைவநெறிக்கூடத்தின் பங்களிப்புடன் ஈழத்தமிழர்களுக்கு உளவள ஆற்றுப்படுத்தல் பயிற்சி

Sri Lankan Tamils Tamils Sri Lankan Peoples Switzerland
By Sajithra Jun 21, 2025 01:31 AM GMT
Report

உலகம் முழுவதும் மதங்களுக்கிடையேயான புரிதலும், ஒற்றுமையும் முக்கியத்துவம் பெறும் இக்காலத்தில், சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்னில் இயங்கும் பல்சமய ஆற்றுப்படுத்தல் மன்றம் என்ற அமைப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் உளவள ஆற்றுப்படுத்தல் (Spiritual Care) கற்கை நிகழ்ச்சி, மதங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் முயற்சியாக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த முயற்சியின் ஒரு முக்கிய பங்குதாரராக சைவநெறிக்கூடம், தமிழர்களின் ஆன்மீக, பண்பாட்டு அடையாளத்தை முன்னிலைப்படுத்தி, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களை உளவள ஆற்றுப்படுத்துநர்களாக உருவாக்கி வருகிறது.

இவ்வருடத்திற்கான பயிற்சியை செல்வி லாவண்யா, செல்வி அபர்ணா மற்றும் செல்வன் சபீன் ஆகியோர் வெற்றிகரமாக முடித்து, 19. 06. 2025 நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவில் பங்கேற்றனர்.

பல்சமய ஒற்றுமை – பயிற்சியின் ஆதாரம்

2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட “பல்சமய இல்லம்” என்பது கிறித்தவம், இசுலாம், யூதம், சைவம், பகாய், சீக் உள்ளிட்ட எட்டு முக்கிய சமயங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக ஒரே கூரையின் கீழ் பணியாற்றும் அமைப்பு.

சைவநெறிக்கூடத்தின் பங்களிப்புடன் ஈழத்தமிழர்களுக்கு உளவள ஆற்றுப்படுத்தல் பயிற்சி | Spiritual Healing Training For Eelam Tamils

இந்த இடத்தில் ஒவ்வொரு சமயத்தினரும் தங்களது வழிபாடுகள், விழாக்கள், பண்பாட்டு நிகழ்வுகளை நடத்துவதோடு, மதங்களைத் தாண்டிய கலந்துரையாடல்கள், சமூகவிருத்தி திட்டங்கள் ஆகியவற்றிலும் பங்கேற்கின்றனர்.

2017ஆம் ஆண்டு, இந்த அமைப்பின் கீழ் “மருத்துவமனைகளில் கிறிஸ்தவமல்லாத மதங்களைச் சேர்ந்தவர்களுக்கான உளவள ஆற்றுப்படுத்தல்” என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

அதன்பின்னர் பல்சமய பல்லினப் பல்பண்பாட்டு பயிற்சிப் பயணமாக இது வளர்ந்து, சுவிற்சர்லாந்து அரசிலும் மதரீதிப் பிரதிநிதிகளிடையிலும் மதிப்புப் பெற்றுள்ளது.

சைவநெறிக்கூடத்தின் பங்களிப்பு

சைவநெறிக்கூடம், சுவிற்சர்லாந்தில் வாழும் ஈழத்தமிழர்களின் மத-சமூக தேவைகளை அடையாளம் காண்பதோடு, சமய, மொழி, பண்பாடு, வரலாறு மற்றும் ஆன்மீக நெறிகளை தாங்கி நடத்தும் அமைப்பாக இயங்குகின்றது. இதுவரை மூன்று கட்டமாக 12 பேர் சான்றிதழுடன் கூடிய உளவள ஆற்றுப்படுத்தல் பயிற்சியை முடித்துள்ளனர்.

சைவநெறிக்கூடத்தின் பங்களிப்புடன் ஈழத்தமிழர்களுக்கு உளவள ஆற்றுப்படுத்தல் பயிற்சி | Spiritual Healing Training For Eelam Tamils

இக்கற்கையின் நோக்கம், நெருக்கடிகள், துயரங்கள், மரணம், நோய், அல்லது ஏனைய சவால்கள் போன்ற தருணங்களில் மக்கள் மனநலனுக்காக ஆன்மீக ஆதரவை அளிக்கும் ஆற்றலை வளர்த்தல். “உளவள ஆற்றுப்படுத்தல் என்பது கேட்பதும், ஏற்றும் மனப்பான்மையும் ஆகும். அது நம்பிக்கையையும், ஆறுதலையும் மக்களுக்கு அளிக்க உதவுகின்றது” என சைவநெறிக்கூடத்தின் உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

சான்றிதழ் வழங்கும் விழா

19. 06. 2025 அன்று பேர்னில் நடைபெற்ற விழாவில், பயிற்சி முடித்தோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், சைவநெறிக்கூடத்தின் சார்பில் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் மற்றும் லாவண்யா இலக்ஸ்மணன் ஆகியோர் கலந்து கொண்டு, பயிற்சி அளித்த அந்திரேயா ஆபிரகாம் மற்றும் பாஸ்கால் மோசிலி ஆகியோரை பொன்னாடை அணிவித்து மதிப்பளித்தனர்.

சைவநெறிக்கூடத்தின் பங்களிப்புடன் ஈழத்தமிழர்களுக்கு உளவள ஆற்றுப்படுத்தல் பயிற்சி | Spiritual Healing Training For Eelam Tamils

இந்நிகழ்வில் உரையாற்றிய சிவருசி சசிக்குமார், “உலகம் பல திசைகளிலும் கடுமையான சவால்களை சந்திக்கும் இக்காலத்தில், மதங்களைக் கடந்து மாந்தர் உண்மை அன்பில் இணைவதே முக்கியம். இக்கற்கை யூதம், கிறித்தவம், இசுலாம், சைவம், பகாய், சீக் ஆகிய சமயத்தினரை இணைத்துள்ளது. இது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. எந்தச் சமயமும் மனிதனை அடிமையாக்குவதில்லை.

மதிப்பும் அன்பும் கொண்டு நாம் வாழ்கின்ற சமுதாயத்தை மேம்படுத்துவோம்” என்று கூறினார்.

முன்னோக்கி ஒரு நம்பிக்கை நடை

சைவநெறிக்கூடம் வழிகாட்டும் இந்த பயிற்சி வாயிலாக, தமிழர்கள் தற்போது சுவிற்சர்லாந்தின் சமூக அமைப்புகளில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களது மொழி, பண்பாடு மற்றும் ஆன்மீக அடையாளங்களை பேணியபடி, மற்ற சமுதாயங்களுடன் இணைந்து உளவள ஆறுதலையும், சமய ஒற்றுமையையும் வலுப்படுத்தும் இக்கருத்து, மற்ற சமுதாயங்களுக்கும் முன்னுதாரணமாக உள்ளது.

சைவநெறிக்கூடத்தின் பங்களிப்புடன் ஈழத்தமிழர்களுக்கு உளவள ஆற்றுப்படுத்தல் பயிற்சி | Spiritual Healing Training For Eelam Tamils

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Siegen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், பிரித்தானியா, United Kingdom

27 Sep, 2010
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கட்டுவன், மீசாலை, Toronto, Canada

22 Sep, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், யாழ். அத்தியடி, உரும்பிராய், திருகோணமலை, Milton, Canada

21 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US