கணிசமாக குறையும் முல்லைத்தீவு மாவட்ட சனத்தொகை - ரவிகரன் எம்.பி கவலை
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டு புள்ளிவிபரங்களின் படி, 21 ஆயிரம் வரையான மக்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் மாவட்டத்தை விட்டு வெளியேறியுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கவலை வெளியிட்டுள்ளார்.
முள்ளியவளை மாமூலைப்பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவில் குறையும் சனத்தொகை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை நாட்டில் அதிக சனத்தொகை உள்ள மாவட்ட கம்பஹா மாவட்டம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டம் இரண்டின் கடந்த 5 வருடக்கால புள்ளிவிவரங்களை பார்க்கும் பொழுது கடந்த 2021ஆம் ஆண்டை விட 2026ஆம் ஆண்டு காலப்பகுதியில் உள்ள மக்கள்தொகையின் வித்தியாசம் 21 ஆயிரம் குறைவடைந்துள்ளது.
அரசினால் மேற்கொள்ளப்படுகின்ற காணி அபகரிப்பு போன்ற செயல்களால் பலர் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடல் அரிப்பு போன்ற இயற்கை அனர்த்தங்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது.

இவ்வாறு இருந்தால் ஒருகாலகட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டம் இல்லாமல் போகுமோ என்ற நிலை வரலம் என்பதோ தெரியவில்லை. பிறப்பு வீதத்திலும் தமிழர்களின் வீதம் குறைவு 1983,84 ஆம் ஆண்டுகாலத்தில் குடும்பநலத்திட்டம் என்று அரசாங்கம் கொண்டு வந்தார்கள்.
குடியேற்றங்கள் அமைக்க நடவடிக்கை
அதனை சிங்கள மக்கள் பாவிக்கின்றார்களோ தெரியவில்லை ஆனால் தமிழ்மக்கள் தான் அதனை சீராக பேணிக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு பிள்ளை அல்லது இரண்டு பிள்ளையுடன் இருக்கின்றார்கள்.
வடமாகாணத்தில் அதிகளவான நிலப்பரப்பு கொண்ட மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம் புலம்பெயர் அமைப்புக்கள் மக்கள் இந்த மாவட்டத்தில் குடும்பங்களை குடியேற்றுவதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான வலிகளிலும் புலம்பெயர்ந்தவர்களின் கவனங்கள் இருக்கவேண்டும்.
அதற்கான வழிகளை ஏற்படுத்துங்கள் அதற்கு நாங்கள் உதவியாக இருப்போம். இவ்வாறு தான் முல்லைத்தீவின் நிலை போகின்றது என்பதை சுட்டிக்காட்டவேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது என்றார்.
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri