மகிந்த ஆட்சியில் நிகழ்ந்த கொடூரம் : இன்று வழங்கப்படவுள்ள தீர்ப்பு

Gotabaya Rajapaksa Dhammika Perera Law and Order
By Aanadhi Apr 30, 2024 12:05 AM GMT
Report

ரதுபஸ்வெல கிராமத்தில் மூன்று பேர் உயிரிழந்து, ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் காயமடையக் காரணமாக இருந்த ராணுவ துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று(30) வழங்கப்படவுள்ளது.

கம்பஹா, வெலிவேரிய அருகே அமைந்துள்ள ரதுபஸ்வெல கிராமத்தில் பிரபல வர்த்தகரும், பொதுஜன பெரமுனவின் தற்போதைய தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக பெரேராவிற்குச் சொந்தமான ஹேலிஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

குறித்த தொழிற்சாலையின் இரசாயனக் கழிவுகள் காரணமாக ரதுபஸ்வெல கிராமத்தில் நிலத்தடி நீர் மாசுபட்டு, குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

மகிந்த ஆட்சியில் நிகழ்ந்த கொடூரம் : இன்று வழங்கப்படவுள்ள தீர்ப்பு | Rathupaswala Shooting

இதன் காரணமாக தங்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி செய்து தரக் கோரி ரதுபஸ்வெல கிராம மக்கள், கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

அன்றைய போக்குவரத்து அமைச்சின் செயலாளராக இருந்த தம்மிக பெரேரா மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அன்றைய செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ச ஆகியோருக்கு இடையில் நிலவிய நெருங்கிய நட்பு காரணமாக ரதுபஸ்வெல ஆர்ப்பாட்டத்தை அடக்கி, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க ராணுவ படைப்பிரிவு ஒன்று அனுப்பப்பட்டது.

சரமாரியான துப்பாக்கிச் சூடு

பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன தலைமையிலான குறித்த ராணுவப் படையணி, கோட்டாபயவின் உத்தரவின் பிரகாரம் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிக்க பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக , சரமாரியான துப்பாக்கிச் சூட்டை நடத்தியது.

இதன் காரணமாக பாடசாலை மாணவன் ஒருவன் உள்ளிட்ட மூவர் உயிரிழந்து, ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் காயமுற்றிருந்தனர்.

மகிந்த ஆட்சியில் நிகழ்ந்த கொடூரம் : இன்று வழங்கப்படவுள்ள தீர்ப்பு | Rathupaswala Shooting

ராஜபக்‌ச அரசாங்கம் தோல்வியுற்று, நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன உள்ளிட்ட நான்கு ராணுவத்தினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டனர்.

தம்மிக பெரேராவின் ஹேலீஸ் நிறுவன தொழிற்சாலையும் அங்கிருந்து அகற்றிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த ரதுபஸ்வெல சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று(30) கம்பஹா மேல் நீதிமன்றத்தில் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் உலங்கு வானூர்தியை ஏற்க மறுத்த ஈரான் ஜனாதிபதி

இலங்கை அரசின் உலங்கு வானூர்தியை ஏற்க மறுத்த ஈரான் ஜனாதிபதி

முல்லைத்தீவில் வசிக்கும் இலங்கையின் உயரமான மனிதனின் சோகக் கதை

முல்லைத்தீவில் வசிக்கும் இலங்கையின் உயரமான மனிதனின் சோகக் கதை


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US